Dr.V.M.Palaniappan, Ph.D.

Featured Post

SEE MY SPECIAL APPROACH FOR AN IMMEDIATE RECOGNITION OF A ‘PREMATURE’ AND BREAKTHROUGH HEALTHSCIENCE DISCOVERY, THAT WAS ‘RESISTED’ ALL THIS WHILE

SEE MY SPECIAL APPROACH FOR AN IMMEDIATE RECOGNITION OF A ‘ PREMATURE ’  AND BREAKTHROUGH  HEALTH SCIENCE  DISCOVERY , THAT ...

Your needs / Objectives / Indemnification

After reading my articles, if you are convinced of their worthiness/ usefulness, you may want to kindly spread the news to your friends suggesting to read what you had read.

My ambition is to reach out to the World Health Organisation, so that my findings will become useful to people worldwide.
'
I will be happy to cooperate / coordinate with any scientist for the furtherance of my findings.

I am extremely THANKFUL to GOOGLE for their fantastic and free services all the time, for reaching out to the public at large.


Indemnification: All my articles are based on MY OWN research, and I strongly believe that they are true. I have been requesting the W.H.O. and Malaysian Ministry of Health to evaluate my discoveries. Until they are approved for use, the Readers of all my articles should get the approval of a Registered Medical Practitioner prior to practising them, and I should not be held responsible for any mishap at all.





With best wishes and thanks,
Dr. Palani, Ph.D.




Ecological Healing System

Powered By Blogger

ALL THE TIME: Popular Posts

Friday, June 5, 2015

BRAIN EFFICIENCY CAN BE IMPROVED MANIFOLD - ARTICLE IN TAMIL LANGUAGE.


மூளையின் செயற்பாட்டை பலமடங்கு
மேம்படுத்திக் கொள்ளுவதற்கான
வழிமுறைகள். 

© Dr. V. M. Palaniappan, Ph.D. G-mail: vmpalaniappan@gmail.com/ Mobile: 6-012-2071414).
உங்கள் மூளையின் செயற்பாட்டையும் இரத்த அழுத்தத்தையும், மாத்திரை-மருந்தில்லாது, நலமாக வைத்துக் கொள்ளும் பொருட்டு ஓர் அறிவியல் சார்ந்த சோதனையை விளக்குகிறேன், செய்கிறீர்களா?

இரண்டு போகணிகள் (டம்ளர்/tumbler என்பது ஆங்கிலம்) அல்லது கிண்ணங்களை (போல்/Bowl. இதனை bole என்றுதானே உச்சரிக்கவேண்டும்?!  மாறாக, தமிழ்நாட்டில் பலரும் Bowel (பவல்) என்றே சொல்லுகிறார்கள். அது, குடல என்று பொருள்படும்) எடுத்துக் கொள்ளுங்கள்.
(ஒரு சிறுகரண்டி (தேக்கரண்டி= டீஸ்பூன்) ஏறத்தாழ 5 கிராம் அளவிலானது என்பது நமக்குத் தெரியுந்தான்.)

ஏறத்தாழ அரைக்கால் சிறுகரண்டி அளவு (1/8th teaspoon) சாதாரணமாகச் சமையலுக்குப் பயன்படுத்தும் தூள் உப்பை எடுத்து (250 மில்லி அளவிலான) ஒரு போகணியில் போடுங்கள். அதனுள் ஏறத்தாழ 10 மில்லிலிட்டர் அளவிலான நல்ல தண்ணீரை ஊற்றிக் கலக்குங்கள். இது, உப்புக் கசமாக இருக்கும்.இதனை "முதல் போகணி" என்று சொல்லிக் கொள்ளுவோம்.

மற்றோரு போகணியிலும் அதேபோல அரைக்கால் சிறுகரண்டி அளவிலான உப்பைப் போடுங்கள். கூடவே, 10 மிலி தண்ணீரையும் அதனுள் ஊற்றி அதனையும் கலக்கிவையுங்கள். இது, இரண்டாவது போகணியாகட்டும்.
பிறகு,

முதல் போகணியில் உள்ள உப்புக் கரைசலில் ஒரு சொட்டுக் குடியுங்கள். இதனைச் செய்வதற்கு ஒரு சிறிதும் அஞ்சவேண்டாம்.
அதனை ருசித்தபிறகு, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு மறுமொழி கூறுங்கள்:

கேள்வி-1: இந்தக் கரைசலைப்போல ஒவ்வொரு நாளும் மூன்று தடவைகள் குடித்தீர்களானால், உங்களுக்கு இரத்த அழுத்தம் மிக விரைவில் கூடிவிடும் என்பதையும் அதனால் மரணங்கூட மிக எளிதாக ஏற்படும் என்பதையும் ஏற்றுக் கொள்ளுகிறீகளா?

மறுமொழி:  ஆம் / இல்லை*

சரி! இப்போது, இரண்டாவது போகணிக்குள் 250 மிலி நல்ல தண்ணீரை ஊற்றிக் கலக்குங்கள்.
பிறகு,

இந்த நீரில் ஒரு சொட்டுக் குடித்துப் பாருங்கள். குறைவாக உப்புச் சேர்த்த ரசம் போல இருக்கும். இதுவே ரசமாக இருந்தால் “மிகவும் இளசாக இருக்கிறது” என்று சொல்லி, இன்னும் சிறிது உப்புச் சேர்த்துக்கொண்டால் நன்றாக (சுவையாக) இருக்கும் என்று தோன்றும்.

கேள்வி-2: இந்தத் தண்ணீரை, ஒவ்வொரு நாளும் மூன்று வேளைகள் குடித்தால், உங்களுக்கு இரத்தக் கொதிப்பு வருமா?

(தண்ணீராகக் குடிக்காமல், காலையில் உண்ணும் இட்லிக்கு, இதே அளவு லேசாக’ உப்புச்  செர்த்த சட்டிணியையும்  பகலில் உண்ணும் சோற்றுக்குக்  குழம்பாகவும், ரசமாகவும், இரவு உண்ணும் தோசைக்குத் தொட்டுக்கொண்ட சாம்பாராகவும் இதே அளவிலான உப்பைச் சேர்த்துக் கொள்ளுவதாகவும் வைத்துக் கொள்ளலாம்.)

மறுமொழி:  வரும் / வராது*

*  *  *  *  *  * 
முதல் கேள்விக்கு உங்களுடைய மறுமொழி, “ஆம்! இரத்த அழுத்தம் கூடி மரணத்தை ஏற்படுந்தான்!” என்பதாகத்தான் இருக்கும். ஐயமே இல்லை!

இரண்டாவது கேள்விக்கு, “இரத்த அழுத்தம் கூடாது, எனவே அதனால் மரணமும் ஏற்படாது” என்றுதான் அனைவருமே சொல்லுவீர்கள். இதிலும் ஐயமே இல்லை.
கேள்வி-3: அதெப்படி? இரண்டிலும் ஒரே அளவு உப்புத்தானே உடம்பினுள் போகிறது. ஒன்றுமட்டும் எப்படி அழுத்தத்தைக் கூட்டவும் மரணத்தை ஏற்படுத்தவும் முடியும்?

மறுமொழி: நீங்கள் யாது கூறுவீர்கள்?

என்னுடைய கணிப்பு: “உப்பு இரண்டிலும் ஒரே அளவாக இருந்தாலும், ஒன்றில் தண்ணீர் குறைவாகவும் மற்றோன்றில் கூடவும் இருக்கின்றது” என்றுதான் சொல்லப் போகிறீர்கள்.

கேள்வி-4: அப்படியானால், உப்பின்மேல் ஏன் வீண் பழி போடுகிறீகள்? உண்ணும் உணவு யாவற்றிலும் உப்பை நிறையச் சேர்த்துக் கொண்டு, சுவையாக நன்றாக உண்டுகழித்து, கூடவே, உடனடியாகத் தண்ணீரை மிகுதியாகக் குடித்துவிட்டாலும் இரத்த அழுத்தம் கூடாதுதானே?!

ஞாயமாகப் பார்த்தால், மருத்து ஆய்வாளர்களும், உலக நல நிறுவனமும் (W.H.O) மக்களுக்கு எவ்வாறான அறிவுரைகளைக் கூறியிருக்கவேண்டும்?
“மக்களே, உப்பை வேண்டும் அளவிற்கு, ஒரு சிறிதும் கவலைப் படாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால், மறந்துவிடாமல், நிச்சியமாக நிறையத் தண்ணீரை உடனடியாகக் குடித்துவிடுங்கள். இவ்வாறு செய்தால், உங்களுக்கு இரத்த அழுத்தமும் அதனுடன் தொடர்புள்ள மரணமும் வரவே வராது!” என்றல்லவா கூறியிருக்க வேண்டும்! ஏன் தவறான செய்தியை அறிவுறுத்தி, மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி, நிம்மதியைப் போக்கும் செயலை மேற்கொள்ளுகிறார்கள்?

கேள்வி-5: (இது, நீங்கள் என்னிடம் கேட்க விரும்புவது): உணவின் ருசி சற்றுக் குறைந்தால் என்ன கெட்டுவிடப் போகிறது? உப்பைக் குறைத்தே உண்டு பழகிவிட்டது. அச்சமில்லாமல் அப்படியே வாழ்ந்துவிட்டுப் போகிறோமே!

மறுமொழி: (நான் சொல்லுவது): முதற் பகுதி:

“எலக்ட்றோலைட்ஸ்” (Electrolytes) என்ற சொல்லைக் கெள்விப் பட்டிருக்கிறீர்களா?
உப்பு (SODIUM, CHLORIDE, Calcium, Magnesium, Potassium, etc.) ஆகியவை “எலக்ட்றோலைட்ஸ்” எனப்படுகின்றன.

இவை யாவும் நமது உடலும் மூளையும், இருதயமும், சதைகளும், இன்னும் பலவும் திறம்பட இயங்குவதற்கு மிகவும் இன்றியமையாப் பொருட்களாகும்.

(இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ளவிரும்புவோர், கீழுள்ள இணைப்பின் வழி பெறலாம்: http://health.howstuffworks.com/wellness/diet-fitness/information/question565.htm  இதன்வழி பெறப்பட்ட சில விவரங்கள்:
What are electrolytes? Electrolytes are important because they are what your cells (especially nerve, heart, muscle) use to maintain voltages across their cell membranes and to carry electrical impulses (nerve impulses, muscle contractions) across themselves and to other cells. Your kidneys work to keep the electrolyte concentrations in your blood constant despite changes in your body. For example, when you exercise heavily, you lose electrolytes in your sweat, particularly sodium and potassium.)

மூளையில் உருவாகும் செய்தி நரம்புகளின் (வெள்ளையாக உள்ள nerves, இரத்த நாளங்கள்அல்ல) வழியாக மற்ற உறுப்புக் களுக்குச் செலுத்தப் பட்டுச் செயலாக்கங் காணுகின்றது.

எடுத்துக்காட்டுக்கு (எ.கா.):

நான் மகிழுந்து ஒன்றை 120 கிலோமீட்டர் வேகத்தில் நேரானதொரு நெடுஞ்சாலையீல் ஒட்டிக் கொண்டிருக்கிறேன் எனக் கொள்ளுவோம்.

ஒரு கி.மீ. தோலைவில் ஒரு எறுமை குறுக்கே வந்துகொண்டிருப்பதை எனது கண்கள் பார்த்துவிட்டன.

இந்தச் செய்தியை நரம்பின் வழியாக கண்கள் மூளைக்கு அனுப்புகின்றன.

உடனடியாக, எனது மூளை, “பிரேக்கை அழுத்தி, பெட்ரோலைக் குறைத்துக் காரை உடனே நிறுத்து. அதேவேளையில் ஸ்டியரிங்கை இறுக்கமாகப் பிடித்துக் கொள்” என்பன போன்ற கட்டளைகளை எனது கைகளுக்கும், கால்களுக்கும் அனுப்புகின்றது.

எனது உடம்பில் போதிய அளவிற்கு இந்த எலக்ட்றோலைட்ஸ் (மிக முக்கியமாக சோடியம் எனும் உப்பு) இர்ந்தால்தான் இந்தக் கட்டளைகள் விரைவாக எனது கைகளுக்கும் கால்களூக்கும் போய்ச் சேரும். (எலக்ட்றோலைட்ஸ் = எலக்ரிசிட்டி என்று தொடர்பு படுத்திக் கொள்ளுங்கள்: மின்சாரம் பாய்வது என்பதாகும்.)

உப்பு உடலில் குறைவாக இருக்குமானால், செய்தி செல்லும் வேகம் வெகுவாகக் குறைந்துபோய்விடும். (ஆற்றல் குறைவாக உள்ள கணினியைப் போலத்தான்!)

அதன்விளைவு: எனது மூளை மெதுவாகச் செயல்பட்டமையால், எறுமைமேல் மோதி மிகவும் மோசமான விளைவுகள் ஏற்பட்டுவிடும்.

அதாவது: உப்பு போதிய அளவிற்கு உணவோடு சேர்த்துக் கொள்ளாவிட்டால், மூளையின் எல்லாச் செயல் திறன்களும் குறைந்து போய்விடும்.

உப்பு உடலில் குறைந்துபோய்விட்டால், கணவன்-மனைவி உறவின்போது ஏற்படும் இன்பம் உட்பட எல்லாவகைச் சுரணைகளும் குறைந்துபோய்விடும்! உறுப்புக்களின் செயல்திறன குறைந்துபோதல், அறிவுக் குறைபாடு, நினைவாற்றலும், படிப்புத் திறன் குறைதல் ஆகியவை ஏற்படும்.

“சுரணை கெட்டுப் போய்விட்டாயே, சோற்றில் உப்புப் போட்டுத்தானே உண்ணுகிறாய்?” என்று நாம் கேட்பதில்லையா –அதுதான் இது!

எனவே, உறுதியாக உப்பைக் கூடுதலாகத்தான் உட்கொள்ளவேண்டும்.

கேள்வி-6: அவ்வாறானால், எவ்வளவு உப்பைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்?

மறுமொழி: நூற்றிப்பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னால்வரை விட்டமின் என்றால் உலகில் யாருக்குமே என்னவென்று தெரியாது.

அவ்வாறானால், அதுவரை வாழ்ந்த மனிதர்கள் யாவரும் விட்டமின் பற்றாக் குறையால் நோயுற்றுத்தான் வாழ்ந்தனரா?

அதேபோல, விலங்குகளுக்கும் விட்டமின்கள் தேவைதான். இன்றுவரை அவை எந்த மருத்துவரிடமும் சென்று இரத்தப் பரிசோதனை செய்துகொண்டு, போதாத விட்டமின்களை கால்நடை மருத்துவரிடம் கேட்டு வாங்கி உட்கொண்டுதான் வாழ்கின்றனவா?

இல்லைதானே?!

நம் உடம்பில் விட்டமின்-D பற்றாக்குறை ஏற்படுமானால், நமக்கு சோம்பேரித்தனமான ஓர் உணர்வு (Lethargy) ஏற்படும். வெயிலில் போய் உட்கார்ந்திருக்கவேண்டும்போல் தோன்றும். அப்படி உட்கார்ந்தால், நம் சருமம் அந்த விட்டமினைப் போதிய அளவிற்கு உற்பத்தி செய்துகொண்டுவிடும். போதிய அளவு உற்பத்தியான பிறகு, நம்மை அறியாமலேயே நாம் நிழலில் நிற்க விரும்புவோம்.

கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணுக்கும் கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்கும் இடைக்காலத்தில் ஓரிரு மாதங்களுக்குச் சிறிது அதிகமான அளவில் விட்டமின்-C தேவைப்படும்.

இப்போதெல்லாம், கர்ப்பமுற்ற காலந்தொடங்கி, தொடர்ந்து உட்கொள்ளச் சொல்லி, மகப்பேறு மருத்துவர் அந்த விட்டமின் மாத்திரைகளைக் கொடுத்துவிடுகிறார்.

அவ்வாறானால், நூறு ஆண்டுகளுக்கும் முன்னர் கர்ப்பமடைந்த பெண்கள் யாவரும் நலிந்த பிள்ளைகளைத்தான் பெற்றனரா?

இல்லை.

விட்டமின்-சி எனப்படுவது Ascorbic Acid எனும் அமிலமாகும்.

எல்லா அமிலங்களூம் புளிப்பு ருசியைக் கொண்டவை.

தாய்மை அடைந்த பெண்ணுக்கு, மாங்காய் தின்னவேண்டும் என்ற ஆசை ஏற்படும்.

மாங்காய் புளிப்புடன் கூடியதல்லவா?! அதில் நிறைய விட்டமின்–சி இருக்கிறது.

அதைத் தெவிட்டும் அளவிற்குத் தின்றவுடன் அந்தப்பெண்ணுக்குத் தேவைப்படும் அந்த உய்ர்ச்சத்துக் கிடைத்துவிடும்.

இவ்வாறுதான், இறைவன்/இயற்கை நமது உடலை லட்சக்கணக்கான ஆண்டுகளாகப் பேணிவந்திருக்கிறது.

இந்த அடிப்படையில், நம் உடம்புக்குத் தேவையான அளவு உப்பு எவ்வளவு என்றால், ஆளுக்குஆள், உடல் எடைக்கும், வளர்ச்சிக்கும் வயதிற்கும், தட்ப-வெப்பத்திற்கும், நம் உடல் உழைப்பிற்கும் ஏற்றாற் போல் உப்பின் தேவை மாறுபட்டிருக்கும்.

அதை எப்படிக்  கண்டுபிடிப்பது?

நாம் உண்ணும்போது, எந்த அளவு உப்பு நாம் இன்பமுறும் அளவிற்குச் சுவையாக இருக்கிறதோ அதுதான் நம் உடம்பிற்குத் தேவைப்படும் அளவாகும்.

நான் உண்ணும்போது எனக்கு அந்த உணவில் உள்ள உப்புச் சுவை கசமாக இருந்தால், அது, என் உடம்பின் தேவைக்குக் கூடுதலாக இருக்கிறது என்று பொருள்.

நான் உப்புப் போதவில்லை என்று உணர்ந்தால், அது பற்றாக் குறை என்பதை உணர்த்துவதாகக் கொள்ளவேண்டும்.

நாம் கூடுதலாக உப்பை உட்கொண்டுவிட்டோமானால், சிறிதும்  கவலைப்படவேண்டாம்.  ஏனெனில், தண்ணீர் குடித்துவிட்டால், அந்த அதிகப்படியான உப்பு நமது சிறுநீரின் வழியாக உடம்பைவிட்டு வெளியேறிவிடும். (அதனால்தான் நமது சிறுநீர் உப்பாக இருக்கிறது.)

இதைச்  சோதனை செய்வதற்காக, நான், ஓராண்டுக் காலத்திற்கு, உண்ணும் உணவிலும், குடிக்கும் 2 லிட்டர தண்ணீரிலும் உப்பைக் கல்ந்து குடித்து, அடிக்கடி இரத்தத்தில் உள்ள உப்பின் அளவையும் இரத்த அழுத்த்தையும் கண்காணித்து வந்தேன்.  (2 லிட்டர் தண்ணீரை நாள்தோறும் குடித்ததோடு, ஒவ்வொரு நாளூம் 8 தடவைகள் சிறுநீர் கழித்தும் வந்தேன்).

விளைவு: அன்றுமுதல், இன்றுவரை எனது இரத்தத்தின் தன்மை மிக நன்றாகவே இருக்கிறது. அழுத்தம் இன்றுவரை மேலுள்ள சிஸ்டாலிக் அழுத்தம் 117 முதல் 129 வரை மாறுபட்டும், கீழ் உள்ள டையாஸ்டாலிக்அழுத்தம் 65 முதல் 75 வரையிலும், நாடித்துடிப்பு அதேபோல 65 முதல் 72 வரையிலுமாகத்தான் இருந்து வருகிறது.

இப்போதும், எப்போதுமே எல்லா உணவுகளிலும் ஐயோடின் கலக்காத உப்பை அதிகமாகச் சேர்த்துக்கொண்டு, சுவையாக, நன்றாக, ஒருசிறிதும் கவலைப்படாது உண்டுதான் அனுபவிக்கிறேன்.

நானும் என்னிடம் மருத்துவம் பார்த்துக்கொண்டு மிகுந்த நலமாக இருந்துவரும் யாவருக்கும உள்ள துன்பம் யாதெனில்:

எந்த உணவகத்திற்குச் சென்றாலும், வேறு எங்கானாலும், தேங்குழல்-முறுக்கு, ஓமபொடி, தோசைப்பொடி, தோசை, வடை என எல்லாவகை உணவுகளிலும் போதிய உப்பில்லாமல் சப்பென்று இருப்பதுதான்!

நான் முறுக்குத் தின்னும்போது, அதில், விரல்களை ஈரமாக்கிக்கொண்டு, உப்பைத் தொட்டு அந்த முறுக்கில் தடவிய பிறகுதான் தொண்டைக்குள்  இறங்குகிறது.

* * * * * *
நண்பர்களே,

1.  இதுபற்றிய முழு விவரத்தையும் அறிந்துகொள்ள வேண்டுமானால், நான் எழுதியுள்ள Palaniappan, V.M. (2001). Heart Problems: Causes, Cure and Prevention. Pub: Ecohealath Sdn.Bhd., Malaysia. 287pp. ISBN 978-967-9988-08-2. என்ற நூலைப் படித்துப் பாருங்கள்: மிகத்தெளிவான விளக்கங்கள் கிடைக்கும்.

2.  இந்தியாவில் செயற்கையாக ஐயோடின் கலந்த உப்புத்தான் எல்லாக் கடைகளிலும் விற்கிறார்கள். மலேசியாவிலும் மற்றெல்லா நாடுகளிலும் ஐயோடின் கலக்காத, இயற்கையான உப்புத்தான் பெரும்பகுதி விற்கிறார்கள்.

வேண்டுமானால் மட்டும் ஐயோடின் கலந்த உப்பைக் கேட்டுவாங்கிக் கொள்ளமுடியும். 

இயற்கையான உப்பில் நம் உடம்பிற்குத் தேவையான அளவு ஐயோடின் இருக்கிறது. எனவே, உப்பைக் குறைத்துப் போட்டுக் கொண்டால்தான் ஐயோடின்  பற்றாக் குறை ஏற்படும். இயற்கையான உப்பை ருசிக்கு ஏற்றாற்போல நிறையச் சேர்த்துக் கொண்டால், அது எந்தக் கெடுதலையும் செய்யாது -  மாறாக, மூளையின் திறன் கூடுவது போன்ற நன்மைமட்டுமே விளையும்.

ஐயோடின் கலந்த உப்பை அதிகமாக உட்கொண்டால், தண்ணீரை மிக அதிகமாகக் குடித்தாலும், ஐயொடின் உடலுக்குள் உறைந்துவிடும்.
 
உடம்பினுள் அதிக அளவிலான ஐயோடின் உறைந்துவிடுமானால், அது தொண்டையில் உள்ள தைராய்ட் சுரப்பியைச் செயல் இழக்கச் செய்துவிடும்.
இந்தியாவில், ஐயோடின் செயற்கையாகக் கலக்கப்பட்டுள்ள உப்பை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளும் ஒல்லியாக இருக்கும் மக்களில் நிறையப்பேர்கள் ஹைப்போ தைராய்டிஸம் (Asymptomatic Hashimoto’s Hypothyroiditis) எனும் நோயால் மிகவும் பாதிக்கப்படுவதை, நான் அண்மையில் இந்தியாவிற்குச் சென்றிருந்த போது காணமுடிந்தது. 

செயற்கையாக ஐயோடின் கலக்கப் படாத உப்பைத்தான் நீங்கள் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.  

இந்தியாவில் ஐயோடின் கலந்த உப்பினால் விளையும் கேடுகளைப் பற்றி மிகத் தெளிவான முறையில் ஒரு கட்டுரையை நமது பிளாக்கில் எழுதியுள்ளேன். தேடிப்பாருங்கள், உறுதியாகப் படிக்கக் கிடைக்கும்: http://ecohealingsystem.blogspot.com/ என்பது முகவரியாகும்.  

3.  இந்தக் கட்டுரையைப் படித்த உஙகள் அனைவருக்கும் எனது இந்தங் கனிந்த நன்றி! 

இந்தக் கட்டுரையே மிகவும் நீண்டுவிட்டது. எனவே, வாய்ப்பிருந்தால், மாத்திரை மருந்தில்லாமல், உயர் இரத்த அழுத்தத்தை எவ்வாறு குணப்படுத்திக் கொள்ளுவது என்பதைப் பற்றி எழுதுகிறேன்.
 
4.   பொறுப்பிலிருந்து விலக்களித்தல் / Indemnification: இது எழுதப்படுவதின் நோக்கம்: உங்கள் சிந்தனைக்குத் தேவைப்படும் விவரங்களைத் தெரிவிப்பதற்காகவேதான். நீங்களாக ஏதாவது கேடுகளை உண்டாக்கிக் கொள்ளநேர்ந்தால், அதற்கும் அது போன்ற வேறு எதர்குமே டாக்டர் வி.எம். பழனியப்பனாகிய நான் எந்தவகையிலும் பொறுப்பாகமாட்டேன் என்பதை இதன்வழி தெரிவித்துக் கொள்ளுகிறேன். This article is written with a view to provide information only. Dr.V.M. Palaniappan, the author of this article will NOT be responsible for any mishap that my happen to anybody who reads this article. Every reader, as per Law, is advised to consult their MBBS-qualified doctor (or any Mainstream Medical Practitioner) before taking more salt, or before trying any suggestion mentioned in this article.

நன்றி,
அன்புடன்,
அறிவியல் முனைவர் வி.மு.பழனியப்பன்.








No comments:

Post a Comment